Loading...

அமெரிக்காவில் அடுத்த 2 வாரங்களில் உயிரிழப்பு எண்ணிக்கை மோசமாக இருக்கும்.. டிரம்ப் கவலை


வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் அடுத்த இரண்டு வாரங்களில் அமெரிக்காவில் உயிரிழப்போர் எண்ணிக்கை மிக மோசமாக இருக்கும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் கவலை தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை அங்கு கொரோனாவால் 336851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 9620 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகிலேயே அதிகபட்மசாக நேற்று ஒரே நாளில் 1165 பேர் அமெரிக்காவில் உயிரிழந்தனர். மேலும் உலகிலேயே அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 25136 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

இந்தியாவிடம் கோரிக்கை

இந்தியாவிடம் கோரிக்கை

            என்னதான் உலகின் வல்லரசு நாடாகவே இருந்தாலும் பல லட்சம் பேரை பாதித்துள்ளதால் வெண்டிலேட்டர், மருந்து பொருட்கள், மாஸ்க் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றுக்கு பற்றாக்குறை நிலவுகிறது . இந்தியாவிடம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை (மலேரியா நோய் தடுப்பு மருந்து) அனுப்பி வைக்குமாறு கேட்டுகொண்டுள்ளது அமெரிக்கா. அதிபர் டிரம்ப் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடியிடம் மருந்தை அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்து பேசியுள்ளார்.

மோசமாக இருக்கும் இதனிடையே வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவரம் குறித்து நேற்று முன்தினம் பேட்டி அளித்த அதிபர் டிரம்ப், "நாடு இதுவரை பார்க்காத மிக கொடூரமான காலக்கட்டத்தில் இப்போது வந்துள்ளளது. அடுத்த 2 வாரங்களில் பலி எண்ணிக்கை மிக மோசமானதாக இருக்கும்.

இப்படி ஒரு உயிரிழப்பு முடிந்தளவு உயிரிழப்பை நாம் குறைக்க வேண்டும். இந்த அளவுக்கு உயிரிழப்பு எண்ணிக்கையை நாம் பார்த்தது இல்லை. உலகப் போர் சமயங்களில் இப்படி உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இது நாட்டுக்குள்ளேயே நடக்கும் போர் மிக கொடூரமானது" என்று வேதனை தெரிவித்தார்.

சமூக இடைவெளி அவசியம் அமெரிக்காவின் துணை அதிபர் பைக் பென்ஸ் கூறுகையில், "நோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்படும். பலி எண்ணிக்கை அதிகரிப்பதால் மக்கள் மனம் தளரக்கூடாது. நாடு முழுவதும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்" என்றார்

வீட்டுக்குள் இருங்கள் வெள்ளை மாளிகையில் உள்ள கொரோனா வைரஸ் தடுப்பு குழுவினர் கூறும் போது, அமெரிக்காவில் அடுத்த 2 மாதத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை அதிகரிக்கலாம். இந்த நிலையை தவிர்க்க வேண்டுமெனில் நாம் சமூக இடைவெளியை கடைபிடித்து வீட்டுக்குள் இருக்க வேண்டும்" என்றார். இதனிடையே மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கி கிடக்கிறார்கள்



 

 

123 Sample Rd, Samplington, SA 12345
(555) 0123