Loading...

கார்பரேட் வரி அதிரடியாக குறைப்பு.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.. உற்பத்தி பெருக வாய்ப்பு


பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது- நிர்மலா சீதாராமன் -வீடியோ

டெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி விகிதங்களை குறைப்பதற்கான அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். இதனால் அரசுக்கு, கூடுதலாக ரூ .1.45 லட்சம் கோடி செலவுபிடிக்கும்.

ஒரு நிறுவனம் நிதியாண்டில் இருந்து எந்தவிதமான விலக்குகளையும், சலுகைகளையும் பெறாவிட்டால் 22 சதவிகிதம் வருமான வரி செலுத்த வாய்ப்பு உண்டு. இந்த நிறுவனங்களுக்கான கூடுதல் கட்டணம் மற்றும் செஸ் உட்பட அனைத்து கார்பொரேட் வரியும், சேர்த்து, 25.17 சதவீதமாக இருக்கும்.

புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும், மேக் இன் இந்தியா திட்டத்தை வலுப்படுத்துவதற்கும், 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதிக்குப் பிறகு இணைக்கப்பட்ட எந்தவொரு புதிய உள்நாட்டு உற்பத்தி நிறுவனமும் 15 சதவீத வரி செலுத்தலாம். எந்தவொரு வரி விலக்கையும் பெறாத நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கிய நடப்பு நிதியாண்டில் இருந்து புதிய வரி விகிதம் அமலுக்கு வருகிறது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். நிர்மலாவின் அறிவிப்புகளைத் தொடர்ந்து பங்குச் சந்தைகள் கிடுகிடு ஏற்றம் கண்டன. நிஃப்டி 300 புள்ளிகளை கூடுதலாக ஈட்டியது, சென்செக்ஸ் 1,300 புள்ளிகளை தாண்டியது.

 

FM Announces Rs 1.45 Lakh Crore Package, and Cuts Corporate Tax
பெருநிறுவனங்களுக்கான தற்போதைய கார்பொரேட் வரி 30 சதவீதமாக உள்ளளது. எனவே இது நிறுவனங்களுக்கு லாபமாகும். அதே நேரத்தில் புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கு வரி 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.


123 Sample Rd, Samplington, SA 12345
(555) 0123